Tuesday, February 2, 2010


நண்பர்களே !

கடந்த ஓராண்டில், நம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களில் ஒருதலைப்பட்ச மாற்றங்கள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளன. இவையனத்தும் நமக்கு நன்மை பயக்கக் கூடியவையா என்று ஆராய்வது ஒருபுறம் இருக்க, இவையனைத்தும் நம் நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் எண்ணத்தோடு கொண்டுவந்தவைதானா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மாற்றங்கள்

1. முகவர்களுக்கான குறைந்தபட்ச வணிக அளவை உயர்த்தியது.

2. முகவர்களுக்கான மன்றவிதிமுறைகளை மாற்றியது.

3. நேரடி முகவர்களின் இணைப்பில் விதிமுறைகளை மாற்றியது.

4. வளர்ச்சி அலுவலர்களின் சிறப்பு விதிமுறைகள் 1989 மாற்றியது.

புதிய உத்திகள்

1. முதன்மை ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் (CLIA) நியமனம்.

2. முதுநிலை வணிக கூட்டாளிகள் (SBA) நியமனம்.

3. நேரடி விற்பனை அதிகாரிகள் (DSE) நியமனம்.

4. பிரிமியம் வசூல் மையங்கள் (Premium Points) நியமனம்.

கிடப்பில் இட்டவை

1. ஊதிய உயர்வு குறித்த ஏற்புடைய நியாயமான தீர்வுகள்.

2. Big Leap போட்டிக்கான பரிசுத்தொகை.

3. PLLI யில் உள்ள முரண்பாடுகள்.

4. ஊக்கத்தொகை திட்டத்தில் உருப்படியான தீர்வுகள்.

அமைதிமட்டுமே காத்து செய்யத் தவறியது

1. எல்.ஐ.சி சம்பந்தப்பட்ட மைய அரசின் தவறான சட்ட திருத்தங்கள்.

2. ஸ்வரூப் கமிட்டியின் முகவாண்மை குறித்த தவறான பரிந்துரைகள்.

3. மாறிவரும் சூழலில் conventional மரபு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியது.

4. களப்பணியில் ஈடுபட்டவர்கள் அனைவர்க்கும் சமமான உயரிய பயிற்சிகளிக்கத் தவறியது.

இவையனைத்துமே நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இன்று நிலவும் சூழலில் இவையனைத்தையும் நாம் எதிர்பார்த்து தான் இருந்திருக்க வேண்டும்.

நிர்வாகம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் மறைமுகமாக ஒரே கொள்கை தான் – களப்பணியாளர்களின் பங்களிப்பை குறைத்துவிடுவது – உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது.

எது எப்படி இருப்பினும், நம் கடமை இந்த நிறுவனத்தைக் கட்டிக் காப்பது. அதே சமயத்தில் தன்மானத்தை தரையில் இறக்கிவைத்துவிட்டு தரங்கெட்ட உத்திகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தவறான முடிவுகளைத் திருத்திக் கொள்ளும் பெருந்தன்மை நிர்வாகத்திற்கு சுலபமாக வருவதில்லை. நம்பிக்கை தளர வேண்டாம். நல்ல புத்தி வருவதற்கான மாற்றங்கள் குகையின் தொலைவில் தெரியும் வெளிச்சம் போல் லேசாக தெரிகிறது.

நம்பிக்கை வைப்போம். தொடர்ந்து நம் நியாயமான கோரிக்கைகளை வைப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகத்தின் சர்ச்சைக்குறிய முடிவுகள் அனைத்தையும் குறித்து இந்த இதழில் பார்ப்போம்.

உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

‘என்ன எழுதுவதுஎன்று எண்ணாமல் உங்கள் ‘எண்ணங்களை எழுதுங்கள்’.

என் தோழன் ஒவ்வொருவனும் ஒன்றோ அல்லது பல கலைகளிலோ வல்லவன்.

உங்களின் சொல்லாற்றல், அதில் உண்மை, நேர்மை இவையே இந்த நிறுவனத்தின் நிகரில்லா நிலைமைக்கு காரணம். முக்கிய காரணம்.

இந்தப் பெருமித்தோடு, வரும் இதழ்களை இன்னும் களைகட்டச் செய்வீர்க்ள என்ற நம்பிக்கையுடன்,

உங்களில் ஒருவன்.

ஆசிரியர்

1 comment:

  1. It is heartening to see KALAMURASU after a brief gap.Thanjavur division has been the forfront runner in contributing NFIFWI.Let us all join together to inspire,educate & guide our members for a better TOMORROW.
    Bottomline:
    kudos comrade.keep it going.It has been a good beginning
    -N.ARUNRAJ

    ReplyDelete