
நமக்கு தரவேண்டிய கடனைத் திருப்பிக் கேட்டா சில மனிதர்கள் ‘காந்தி கணக்குல’ எழுதிக்கோ என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். அது என்ன காந்தி கணக்கு என்று புரிந்ததோ இல்லையோ, பணம் திரும்ப வராது என்று மட்டும் புரிந்திருப்போம்.
ஆனால் ‘காந்தி கணக்கு’ப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. 1947ற்கு முன்னால், ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடந்ததை நாம் அறிவோம். அப்போது சுதந்திர போராட்ட இயக்கத்திற்காக மக்களிடமும், தனியார் நிறுவங்களிடமும் நிதி வசூல் செய்தார்கள்.
பெரும்பாலும் தனியார் கம்பெனிகளில் நிதிநிலை அறிக்கையில் கணக்கிற்கு கொண்டுவர முடியாத தொகையை ‘காந்தி கணக்கு’ என்று தலைப்பிட்டு நேர் செய்து விடுவார்களாம். அதாவது ‘மறைக்கப்பட்ட தொகையை’ , காந்தி கணக்கில் சேர்த்து விடுவார்கள். தேசப்பிதா அவர்களை மன்னிக்கட்டும்.
அது சரி, இந்த தகவல் இப்போது ஏன் என்று கேட்கத் தோன்றுமே ?
என்ன செய்வது..BIG LEAP ஐ நினைத்துப் பார்த்தேன்..இந்த கதை நினைவிற்கு வந்தது !
இது என்ன நியாயம் ?
EOL ல் சென்றது தான் குற்றம் என்றால் அதே காலகட்ட்த்தில் 28.02.08 அன்று வேலை நிறுத்த்தில் ஈடுபட்ட முதல் நிலை அதிகாரிகளுக்கு வழங்கிய அதே நியாயப்படி வளர்ச்சி அலுவலர்களுக்கும் கொடுக்க வேண்டியது தானே?
அப்பட்டமான பாரபட்சம். இதுதான் நடுநிலை நிர்வாகமோ ?
இதுமட்டுமல்ல. 2009 மார்ச்சில் பாராளுமன்றம் முன்பு ஒரு நாளும், மைய அலுவலகம் முன்பு ஒரு நாளும் தர்ணா போரட்டத்தில் நாம் ஈடுபட்டோம். அந்த இரண்டு நாட்களோடு பயண நாட்களான ஏழு நாட்களையும் சேர்த்து EOLஆக பாவித்து சம்பளத்தைப் பிடிக்கச் சொன்ன அராஜகம் வேறு எங்கு பார்க்க முடியும் ?
விடுப்பில் இருந்தாலும் போராட்டத்தில் இருந்தாலும், உள்ளூரில் இருந்தாலும் வெளியூரில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும் படுத்திருந்தாலும் வாடிக்கையாளர் மற்றும் முகவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து கடமையாற்றும் வர்க்கம் நாம். நிர்வாகமே..தவறான, முரணான கொள்கைகளைக் கைவிடு.

No comments:
Post a Comment