
அன்புக்குரியீர்,
வணக்கம் !
நீண்ட இடைவெளிக்குப் பின் களமுரசு மாத இதழை மீண்டும் தொடர்ந்து வெளியிட முடிவு செய்து, முதல் இதழை தங்கள் கைகளில் தற்சமயம் தவழ விட்டிருக்கிறோம்.
கூட்டமைப்பின் பொதுக்குழு முடிவின்படி, 2005-2007ல், இன்னல் மிகுந்த நேரத்தில் தஞ்சைக் கோட்டத்தை தலைமையேற்று நட்த்தி, எனது தோளுக்கு துணை நின்ற தோழர் டி.எஸ்.ராஜன் அவர்கள் ஆசிரியராக இருந்து இந்தப் பணியைத் தொடர உள்ளது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
அடுத்த மாதம் முதல், ஒவ்வொரு கிளையின் சிறப்பிதழாக வெளியிடப்படும். அந்தந்த கிளைத் தோழர்களின் படைப்புகள் சிறப்புடன் வெளிவரும். அத்துடன் பிற தோழர்களின் கட்டுரை, கருத்துக்கள், கவிதைகளும் வெளியிடப்படும்.
இதழில் தங்கள் கிளை சார்ந்த பகுதிகளின் சுற்றுலாச் சிறப்பு, ஆன்மீகத் தலங்கள், முக்கியத் தொழில், விவசாயம், நீர் ஆதாரம், கிளை சம்பந்தமான தோற்றம், பரப்பளவு, முகவர், வளர்ச்சி அலுவலர்கள் எண்ணிக்கை, வணிகம் மற்றும் இன்னபல தெரிந்திருக்க வேண்டிய விவரங்களைத் தொகுத்தளிக்க வேண்டும்.
இவையனைத்தும் பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் களமுரசு ஆசிரியர் குழுவிற்கு வந்து சேர வேண்டும். அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.
சிறப்பிதழில், அந்தந்த கிளை சார்ந்த வணிகப் பெருமக்களின் விளம்பரங்கள் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. விளம்பர வருவாயில் 50% அந்தந்த கிளைச் சங்கநிதியாக அளிக்கப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கிளைச் சங்கத்தின் நிதி நிலைமையைப் மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விளம்பர கட்டணம் தொடர்பான விவரங்கள் பிறிதொரு பக்கத்தில் காணலாம். தொடர்ந்து இதழ் வெளிவருவதும் காலதாமதமின்றி கிடைப்பதும் நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே உள்ளது.
மீண்டும் உங்கள் நல்லாதரவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
உங்கள் தோழன்,
இரா.மூர்த்தி
பொதுச் செயலாளர் / சிறப்பாசிரியர்

No comments:
Post a Comment