கோட்ட நிர்வாக குழு கூட்டம் கடந்த ௨௫.0௭.௨0௧0 அன்று திருச்சி கிளை ஒன்றில் நடைபெற்றது. கிளியா வுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம் குறித்து அனைத்து கிளை தோழர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். நிர்வாகம் தனது போக்கினை மாற்றிக் கொள்ளாவிடில் மேற்கொண்டு முகவர் நியமனத்தை ஆகஸ்டு மாதம் முழுவதும் நிறுத்தி வைப்பது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் நிர்வாகத்துடன் பேசி முடிவு செய்யலாம் என்று கூறியதுடன் தற்காலிகமாக இந்த பிரச்சினை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அகில இந்திய இணை செயலாளர் பெ. மனோகரன் சம்பள விகித பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.
Tuesday, July 27, 2010
Special Recruitment Compaign
கிளியா வுக்கு தரப்படும் முக்கியத்துவம் நம்மை ஒதுக்குவது ஆகாது என்றும் நமக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தரப்படும் என்றும் கோட்டநிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு வளர்ச்சி அலுவலருக்கும் 50 தனி உறையுடன் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் முகவர் ஆக விருப்பம் உள்ளவர்கள் வளர்ச்சி அலுவலர்களை நாடுமாறு கூறும் தனி விளக்க ஏடு அச்சிட்டு தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. தோழர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
Saturday, July 17, 2010
Workshop on Insurance Industry
வளர்ச்சி அதிகாரிகள் பயிற்ச்சிப் பட்டறை நிறைவு
கடந்த ஜூலை 12 மற்றும் 13 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற பயிற்சியில் 93 தோழர்கள் கலந்து கொண்டனர். நமது தென் மண்டல செயலாளர் தோழர் .ஆனந்த், சென்னை கோட்டம் இரண்டின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்கள் முறையே திரு. சஞ்சீவி மற்றும் திரு. ராதா கிருஷ்ணன் ஆகியோருடன், திருச்சி ஆராய்ச்சியாளர் Dr. ரகுராமன் மற்றும் நமது பொதுச் செயலாளர் இரா. மூர்த்தி ஆகியோர் இணைந்து சிறப்பான பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவும்.
Subscribe to:
Comments (Atom)
